ADDED : ஜூன் 12, 2008 11:17 AM

<P>நீ யாரையாவது புகழ்ந்தாலோ அல்லது உன்னை யாராவது இகழ்ந்தாலோ இருவரின் அகங்காரமும் வளரும். ஆனால், கடவுளைப் பற்றி புகழ்ந்து பாடினால் நாளடைவில் அகங்காரம் முற்றிலுமாக நீங்கிவிடும். கடவுள் எல்லா வற்றிற்கும் அப்பால் இருப்பதால் நம்முடைய புகழ்ச்சியோ அல்லது இகழ்ச்சியோ அவரை ஒன்றும் செய்வதில்லை. குறைவாகப் பேசுங்கள். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரமும் கடவுளின் நாமத்தை ஜபியுங்கள். உங்களின் இஷ்டதெய்வத்தை நினைத்து மனதை அலைபாயாமல் இருக்கச் செய்வது மிகுந்த நன்மை தரும். பேசித்தான் ஆக வேண்டும் என்றால் மெதுவாகவும், அதிக சத்தமில்லாமலும் பேசுங்கள். தேவையற்ற விஷயங்களை எப்போதும் பேச வேண்டாம். நேரம் விலைமதிப்பற்றது. சென்ற நேரம் திரும்ப வரவே வராது. தன் குடும்ப பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்றி விட்டு ஆன்மிக வாழ்வை உறுதியோடு முழுமையாக நடத்த விரும்பும் பக்தர் இளமையில் இருந்து எளிய வாழ்வை பயிற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், எளிமை அவ்வளவு சுலபமாக முதுமையில் திடீரென்று வந்து விடாது. எளிமை இல்லாதவனிடம் துறவு மனப்பான்மை உண்டாகாது. நீண்ட காலப் பயிற்சியினாலேயே ஒருவன் எளிமை, துறவு போன்ற உயர்ந்த சிந்தனைகளைப் பெறமுடியும். </P>